மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுணதீவு பகுதிகளில் இன்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இரால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.
இங்கு கருத்துவெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ்,
மட்டக்களப்பு வாவியில் மீன்வளத்தை அதிகரிக்கவும் மீனவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் குறித்த பணி முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் பலனை இன்னும் சில மாதங்களில் மீனவர்கள் அடைந்துகொள்வர் என்றும் தெரிவித்தார். அத்தோடு எதிர்காலத்தில் மேலும் இரால் குஞ்சுகளும் மீன் குஞ்சுகளும் விடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சரின் பிரதிநிகளாக, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.சிவானந்தராஜா மற்றும் சு.சியாந் ஆகியோருடன் மாவட்ட கடற்தொழில் திணைக்கள ஊழியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை