எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது
எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று (21) காலை கூடியிருந்தது.
இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை