நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் 52 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர்களில் 30 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை