தூனிசியாவில் படகு கவிழ்ந்ததில் 43 பேர் பலி

வட ஆப்பிரிக்க நாடான தூனிசியா கடற் பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 43 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் படகு கவிழந்த பின்னர் ஒரே இரவில் 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது.

எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷில் இருந்து 120 க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு லிபியாவின் கடலோர நகரமான ஜுவாராவிலிருந்து வெள்ளிக்கிழமை மத்தியதரைக் கடலைக் வாயிலாக இத்தாலி நோக்கி புறப்பட்ட படகே இவ்வாறு  விபத்துக்குள்ளானதாக மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் செக்ரி கூறுகையில், புலம்பெயர்ந்த 84 பேரும் மீனவர்களால் மீட்கப்பட்டனர். ஏனைய குடியேறியவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அவர் உறுதிபடுத்த மறுத்துவிட்டார்.

சமீபத்திய மாதங்களில், தூனிசியா கடற்கரையில் பல புலம்பெயர்ந்தோர் படகுகள் நீரில் நீரில் மூழ்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.