வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும். 

[நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான், ஐ.எல்.எம். நாஸிம்]
சம்மாந்துறை- வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரம்மோற்சவ பெருவிழாவும், கொடியேற்றமும் இன்று (06) காலை நடைபெற்றது.
பிரதிஷ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி சிவாகம கலாநிதி அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களின் தலைமையிலான சிந்தாயாத்திரைப் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குரு சிவஸ்ரீ கு. நிமலேஸ்வரக் குருக்கள் அடங்கிய வீரமுனை இந்துகுருமார்களின் விசேட பூஜை வழிபாடுகளுடனும், பிராத்தனைகளுடனும் இடம்பெற்ற பிரம்மோற்சவ பெருவிழாவும் கொடியேற்ற நிகழ்வும் மங்கள இசைகள் முழங்க பூஜைகளுடன் நடைபெற்றது.
கொரோணா சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு  மட்டுப்படுத்திப்பட்ட ஆலய பரிபாலன சபையினர் மாத்திரமே இந்நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று ஏற்றப்பட்ட கொடியானது 10 நாட்களின் பின்னர் எதிர்வரும் 15ம் திகதி விசேட பூஜைகளுடன் கொடி இறக்கி வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.