மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி!

மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகிய சம்பவமொன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் பதிவாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையாகிய தரம் இரண்டில் கல்வி கற்கும் ஆறு வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
இவர்கள் வாழ்ந்துவந்த வீட்டினை உடைத்து புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் இருவருமாக இவர்களது வீட்டிற்கு அருகாமையிலுள்ள
உறவினரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். இவ்வாறு புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் வீட்டில் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைதி*மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலி!*
மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் பலியாகிய சம்பவமொன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் பதிவாகியுள்ளது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையாகிய தரம் இரண்டில் கல்வி கற்கும் ஆறு வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
இவர்கள் வாழ்ந்துவந்த வீட்டினை உடைத்து புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் இருவருமாக இவர்களது வீட்டிற்கு அருகாமையிலுள்ள
உறவினரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். இவ்வாறு புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் வீட்டில் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 13.07.2021 மாலை 6 மணியளவில் குறித்த வீட்டிற்குள் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்ததை கண்ட உறவினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து நிலையில் இருந்ததாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சடலத்தை பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீட்டிற்குள் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்ததை கண்ட உறவினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து நிலையில் இருந்ததாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சடலத்தை பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.