இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி?

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்க்காத சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பாராத நண்பர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரணையோடு நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற முன்கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை பராமரிப்பது நல்லது.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நீங்கள் வெற்றி காண முடியும். உத்யோகத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்க கவனச்சிதறல் இல்லாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய பொருட்கள் வாங்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைகளை தீனி போடக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுடைய மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் உண்டாகும். விட்டுக்கொடுத்து செல்வோர் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்ப நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பேச்சுக்கு மரியாதை ஏற்படும். ஆரோக்கியம் சிறக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டி அப்படியே நிறைவேற கூடிய நன்மைகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் பழி ஏற்க வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு அனுகூலமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சக போட்டியாளர்களின் மூலம் சிலர் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவதை தவிர்ப்பது உத்தமம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் காணப்படுவதால் டென்ஷனுடன் இருப்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பந்தம் மென்மேலும் சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமானவரை மௌனம் காப்பது நல்லது. பெண்களுக்கு சமூகத்தின் மீதான எண்ணம் மாறும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பந்தம் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படும் நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். பொறுப்புணர்ந்து செயல்படுவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உத்தியோக ரீதியான வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. முன்பின் தெரியாத நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காண்பீர்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.