இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

இன்றைய ராசிபலன் எப்படி உங்களுக்கு?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலட்சியம் இல்லாமல் எதிலும் கவனத்துடன் செயல்படுவது உத்தமம். பொருளாதாரம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் தடை தாமதங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்வரும் சவால்களை சமாளிக்க கூடிய தைரியத்துடன் காணப்படுவீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆரோக்கியம் பலப்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நேரத்தை வீணாக செலவு செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முகத்தில் புது பொலிவுடன் காணப்படுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வித்தியாசமான சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களை எதிர்ப்பும் பகையாளிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற கடன்களை வாங்கவும், கொடுக்கவும் செய்யும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பொருளாதாரம் சீராகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்திசாலிதனமாக செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. இதில் மற்றும் வியாபாரத்தில் உங்களை சுற்றி இருக்கும் சிலரே உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் தொட்டதெல்லாம் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு ஏதுவான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதாரம் மேம்படும். ஆரோக்கியம் சீராகி வரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் முழு மூச்சோடு முயற்சி செய்து போராடுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமாக இருந்த நீங்கள் அதிலிருந்து விடுபட்டு புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புது பாதை ஒன்று பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொண்டு அமைதியைக் கடைபிடிப்பது உத்தமம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் தென்படும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நிதானமாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய முழு முயற்சிக்கு ஏற்ப பலன்களும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான விஷயங்களில் அக்கறை செலுத்துவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை இழந்து செயல்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு எனினும் கவனத்துடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி உறவு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதிய யுத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையாக சிந்திக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மாறி முன்னேற்றம் தெரியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடை தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் தைரியமாக எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களால் நம்ப முடியாத அளவிற்கு சில மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சாதக பலனை கொடுக்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையை சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை தயக்கமின்றி பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுத்துச் செயல்படுவது உத்தமம். பொருளாதார பிரச்சினைகளை சமாளித்து வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.