இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையாம்!
இன்றைய ராசிபலன் இந்தராசிகாறருக்கு இவ்வளவு நன்மையா ?
09-08-2021
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் சுப யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் யோகம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களால் வீண் பழிகளை ஏற்க வேண்டிய நிலை வரலாம் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம். சுயதொழிலில் நினைத்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிதாகத் துவங்க இருக்கும் விஷயங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தினர் மீது கொண்ட அக்கறை மேலும் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் நீங்கள் நினைப்பதை விட நல்ல லாபத்தைக் காண்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்படக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தைரியமாக முடிவெடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய முயற்சி வீண் போகாமல் வெற்றி காண்பீர்கள். உதியோக ரீதியான வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாகும் என்பதால் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் சோர்வுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்தி ஏற்படும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட சிறப்பான லாபத்தை காண இருக்கிறீர்கள். எதையோ ஒன்று சாதித்தது போல ஒரு மனநிறைவு இருக்கும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த வேலையை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் மேலும் வலுவாகும். உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் சிலவற்றை சாதித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான போட்டி நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். ஆரோக்கியத்தில் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் உண்டாகும். கூட்டாளிகளுடன் இருந்து வந்த பகை நீங்கும். விடாமுயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த சில வேலைகள் முடிவை சந்திக்கும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை