இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் தலையில் பொடுகே வராதாம்..! இன்றே முயற்சிசெய்யுங்கள்
பொடுகு தலைவேர்களின் வறட்சி, எண்ணெய் சுரப்பது குறைவு போன்ற காரணங்கள் மட்டுமல்லாது சொரியாசிஸ், மன அழுத்தம் , ஷாம்பூவில் இருக்கும் இரசாயனம் போன்ற காரணங்களாலும் பொடுகு உண்டாகலாம். எனவே ஆரம்பத்திலேயே பொடுகை வளர விடாமல் தடுக்க உணவின் மூலம் சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
கொழுப்பு உணவுகள் : கெட்டக் கொழுப்புகள் அல்லாமல் ஆரோக்கியமான கொழுப்பை கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். அதாவது ஒமேகா 3 மற்றும் 6 கொண்ட கொழுப்பு உணவுகளான ஆலிவ் எண்ணெய், சால்மன் மீன், மத்தி மீன், கடலை எண்ணெய் , வெண்ணெய் , அக்ரூட் பருப்பு , முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம்.
ஜிங்க் உணவுகள் : வறண்ட சருமம் காரணமாக உருவாகும் பொடுகை போக்க ஜிங்க் உணவுகள் உதவும். பூசணி விதை, நட்ஸ் வகைகள், சிவப்பு இறைச்சி, பால் சார்ந்த உணவுப் பொருட்கள், முழு தானியங்கள், டார்க் சாக்லெட் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
புரோபயோடிக் உணவுகள் : பொடுகை முற்றிலும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது எண்ணெய் சுரப்பு குறைவாக இருப்பதை சமநிலை செய்யும். எனவே பால் சார்ந்த உணவுகள் குறிப்பாக தயிர் , பன்னீர் சாப்பிடலாம். ஊறுகாய் போன்றவை சாப்பிடலாம் .
புரோட்டீன் உணவுகள் : புரதச் சத்து பொதுவாகவே உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கக் கூடிய முக்கியமான உணவாகும். எனவே இறைச்சி வகைகள், முட்டை , கடல் உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம். சைவத்தில் முளைக்கட்டிய பயறு வகைகள், கடலை வகைகள், பசலைக் கீரை, புரக்கோலி ஆகியவை சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் : சர்க்கரை பொடுகு இருக்கும் சமயத்தில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் வேர்களில் உருவாகும் வெள்ளை செதில்களை குறைக்க முடியும்.
முடிந்தவரை செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனெனில் மோசமான குடல் ஆரோக்கியம் கூட பொடுகுக்கு வழி வகுக்கும். எனவே பூண்டு , வெங்காயம் போன்றவற்றை உணவில் சேருங்கள்.
கருத்துக்களேதுமில்லை