இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா…
இந்தியாவில் நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 57 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் வைஸ் தொற்றினால் ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 39 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34 ஆயிரத்து 791 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
இதற்கமைய, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்து 63 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு, 3 இலட்சத்து 99 ஆயிரத்து 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை