யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்கிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தில், மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார்.

எனினும், தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய  வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு விட்டு,   தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.