தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு.
தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் குறைவடைந்தமையின் காரணமாக, செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் 1- 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, “1- 8ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பாடசாலைகள் திறப்பு, முதல்வருடன் ஆலோசித்ததும், செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை