இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 இலட்சத்து 76 ஆயிரத்து 319 ஆக காணப்படுகின்றது.
மேலும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3 இலட்சத்து 1,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை