பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராசு மறைவு – வைகோ இரங்கல்
திராவிடர் கழகத்தின் காப்பாளர்களாக பணியாற்றுபவர்களில் மூத்தவரும், முன்னாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.
தந்தை பெரியார் காலம் தொட்டு தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட அய்யா கோ.தங்கராசு அவர்கள் திராவிடர் கழகம் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர் ஆவார்.
97 வயதைத் தொட்ட அவர் வாழ்நாள் முழுதும் பெரியார் கொள்கை பரப்பும் பணியில் இளையவராகவே செயல்பட்டு சாதனை படைத்தவர் ஆவார்.
அவரது மறைவால் துயரில் மூழ்கியுள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், அவரது வழியில் திராவிடர் கழகம் வளர்க்கும் அன்புச் செல்வங்களான பூவானந்தம், பாண்டியன், மலர்கொடி, திலகவதி ஆகியோருக்கும் மற்றும் உள்ள உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துக்களேதுமில்லை