மீலாது விழா வைகோ வாழ்த்து…

நாம் அனைவருமே சகோதரர்கள்; நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என முழங்கி, மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலை நாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர்.

என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என் கொள்கையில் இருந்து துளி அளவும் மாற மாட்டேன்  என உறுதியுடன் போராடினார். அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அரபிகளின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சி கண்டார்.

அத்தகைய மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளில், தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.