இந்த ஆண்டின் இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் – மத்திய அரசு!
கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி உள்நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான தேவைகளை பாதிக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் இதுவரை 102 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை