தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள பருவமழையால் ஏற்பட்ட  பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

தமிழகத்தில் கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தொடர் கனமழையால், பல்வேறு குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பிவிட்ட நிலையில், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மீட்பு பணிக்களுக்காக அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது வரவேற்கதக்கது.

வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகளை நடத்தி,  தேவையான உத்தரவுகளை முதல்வர் அவர்கள் பிறப்பித்து வருவது பாராட்டுக்குரியது.

இது ஒருபுறம் இருக்க, தொடர் கனமழையால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், ஏழை, எளிய மக்கள் என்ன செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் பருப்பு, சமையல் எண்ணெய், துணிகள், பாய்,  சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

பருவமழையால் ஏற்பட்ட  பாதிப்பை கணக்கில் கொண்டு, வெள்ள நிவாரண அறிவிப்பை வெளியிடவும், பாதிக்கப்பட்ட  அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.