அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் அடையாளம்
அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போட்ட குறித்த நபர் சிட்னியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகத்திற்குச் சென்றிருந்தார், அப்போது அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.
இதற்கிடையில், அந்நாட்டுக்குள் வருகைதந்த விமானத்தில் இருந்த பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை, அவுஸ்திரேலியாவில் ஆறு புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Visit the COVID-19 Information Centre for vaccine resources.
Get Vaccine Info
2
4 shares
Like
Comment
Share
கருத்துக்களேதுமில்லை