புதுவருடம் மற்றும் நத்தார் பருவ கால பொருள் கொள்வனவிற்கென விசேட விலைக்கழிவு பவுச்சர்கள் அறிமுகம்.
புதுவருடம் மற்றும் நத்தார் பருவ கால பொருட்களை இலகுவாக பெறுவதற்கு விசேட விலைக்கழிவுடனான பவுச்சர்களை வழங்கவுள்ளதாக நிந்தவூர் காகில்ஸ் சுப்பர் மார்க்கட் கிளையின் முகாமையாளர் என்.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் தபால் காரியாலய வீதியில் திறந்து வைக்கப்பட்ட நிறுவனம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது
காகில்ஸ் பல்பொருள் வணிக காட்சியறை எமது நிந்தவூர் பகுதியில் நிறுவப்பட்ட விசாலமான காட்சி அறையாகும்.இதனை எமது மக்களின் அன்றாட தேவைகளை கருதி திறந்து வைத்தோம்.இக்கிளையில் தற்போது மக்கள் வருகை தந்து தத்தமக்கு தேவையான பொருள்களை கொள்வனவு செய்கின்றனர்.
மக்களின் நலன் கருதி எதிர்வரும் புதுவருட மற்றும் நத்தார் தினத்தினை முன்னிட்டு எமது காட்சியறையில் விசேட விலைக்கழிவு வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டார்.
குறித்த கிளை திறப்பு விழாவின் போது காகில்ஸ் நிறுவன முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை