பலநோக்கு கூட்டுறவு சங்கம் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும் கிளைச்சங்கங்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும்
அகம் சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் வருடாந்த இந்நிகழ்வு சமாசத்தின் தலைவர் ம.உமாசங்கர் தலமையில் திருகோணமலை சர்வோதய த்தில் நடைபெற்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையில் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் இணைந்து நாடாத்திய நிகழ்வில்
திருகோணமலை மாவட்ட உதவி கூட்டுறவு ஆணையாளர் .திருமதி. உதயராசா, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் உத்தியோகத்தர் பிரபாகரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. ஜிவிதன் சுகந்தினி அகம் நிறுவன இணைப்பாளர் திட்டமுகமையாளர் கள், சாமாச தலைவர்கள் உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
சின்னக்குளம் இத்திக்குளம் பாட்டாளிபுரம் பள்ளிக்குடியிருப்பு ,இறால்குழநாவலடி,புளியடிச்சோலை ,தங்கநகர்,சேருவில,சுமேதங்கபுர, வெருகல் ,வாகரை
திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரிவு
போன்ற கிளைக்கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டன. இதன் போது சங்கங்களின் வருடாந்த செயற்பாடுகள் அளிக்கை செய்யப்பட்டது
சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற பகுப்பாய்வு நிகழ்வில் முதலாம் இடத்தை சின்னக்குளம் அகம் சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கமும், இரண்டாம்இடத்தை இரால்குழி அகம் சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும் பெற்றுக்கொண்டன இச்சங்கங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் சான்றிதல் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டதோடு கலந்து கொண்ட ஏனைய சங்கங்களுக்கும் பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கப்பட்டது
சமூகத்தில் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியினை ஊக்குவிக்கவும் கூட்டுறவாக அனைவரையும் ஒன்றிணைத்து தொழில் முயற்சி யில் ஈடுபடுவதற்கும் ஏற்ற வகையில் இக்கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை