சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த அரங்கு அங்குரார்ப்பண நிகழ்வு…

(சுமன்)
சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பி அவர்களைக் கௌரவிக்கும் முகமாக ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பி ஞாபகார்த்த அரங்கு அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவதிரன் தலைiயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், சீ.ஜெயந்திரகுமார். வி.பூபாளராஜா மற்றும் ஊடகவியலாளர்கள், வீ.சு.கதிர்காமத்தம்பி அவர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் வீ.சு கதிர்காமத்தம்பி அவர்களின் ஞாபகார்த்த அரங்கின் பெயர்ப்பலகையினை அன்னாரின் பாரியார் திறந்து வைத்து அரங்கினை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு அதிகளினால் ஞாபகார்த்த உரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.