மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரைப்பகுதியில் சனிக்கிழமை(9) மாலை காத்தான்குடி பகுதிக்கு 2 கிலோ கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது சந்தேக நபர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் உட்பட 13500 பணமும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை இஸ்மாயீல் புரம் வளாத்தப்பிட்டி எனும் முகவரியைச் சேர்ந்த 40 வயதுடையவரும் பீச் றோட் பெரிய நீலாவணை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருமாவர்.
மேலும் சான்றுப் பொருளுடன் பெரிய நீலாவணை பொலிஸார் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
—
Thanks & Best Regards,
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A (Hons)Diploma-in-journalism( University of Jaffna )
0779008012-(URGENT)
sihanfarook@yahoo.com, sihanfarook@gmail.com, sihanfarook@hotmail.com
0719219055,0712320725, 0754548445
0719219055,0712320725,
கருத்துக்களேதுமில்லை