சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி……
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன.
வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் தலைவர் கு.வி.லவக்குமார் தலைமையில் இவ் விளையாட்டு நிகழ்வு யாவும் நடைபெற்றது.
ஆண், பெண் என இருபாலருக்குமான தோணி ஓட்டம்,கிடுகு பின்னுதல்,கயிறு இழுத்தல்,சாயமுட்டி உடைத்தல்,சிறுவர்,இளைஞர் என இருபாலருக்குமான ஓட்டப் போட்டி என பல்வேறு விளையாட்டு நிகழ்சிகள் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசு வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில்
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளரும் ஆகிய தவத்திரு வேலன் சுவாமி,தென்கயிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகள்,தென் கயிலை ஆதின திருமூலர் தம்பிரான் சுவாமி,அருட்தந்தை கே.ஜெகதாஸ் அருட்தந்தை எஸ்.பிரின்சன், ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை