சித்திரைப் புத்தாண்டு தினத்திலும் அரசுக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டம்!!!!!

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (14) நுவரெலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கையை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது வருகை தந்த அனைவருக்கும் பாற்சோறு பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.