இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசக்கிளைத் தெரிவு.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசக்கிளைத் தெரிவு 30.04.2022 இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைக்கு புதிய தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அந்தவகையில் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தெரிவுகள் போட்டித் தெரிவுகளாக இடம்பெற்றன.
அதன்படி இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று பிரதேசக்கிளையின் தலைவராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், செயலாளராக சதாசிவம் தட்சாணாமூர்த்தியும், பொருளாளராக சத்தியமூர்த்தி சத்தியரூபனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தொடர்ந்து உபதலைவர் மற்றும் உபசெயலாளர் தெரிவுகள் ஏகமதாக இடம்பெற்றதுடன், செயற்குழு உறுப்பினர்களாக பத்து உறுப்பினர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த பிரதேசக்கிளைத் தெரிவுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் வ.கமலேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் ஆ.ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Vijayaraththinam saravanan
கருத்துக்களேதுமில்லை