மீசாலையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு.

சாவகச்சேரி நிருபர்
பாடசாலை அதிபர் ஒருவர் 02/05 திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மீசாலை கிழக்கில் உள்ள அவரது வீட்டு காணிக்குள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பூநகரிப் பகுதியைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் அதிபரான 48வயதான து.அருந்தசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த அதிபரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.