17ஆம் திகதிக்குப் பின் எரிபொருள் நெருக்கடி மோசமடையும் -ஆனந்த பாலித
இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் எரிபொருள் நெருக்கடி மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அரச பொறிமுறையானது திறமையற்றதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் இந்தியாவிலிருந்து டீசலை இறக்குமதி செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 95 ஒக்டேன் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாகவும், மக்களின் குறைகளுக்கு ஜனாதிபதியிடம் பதில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதியின் அடிப்படையில் ஒரு தரகுக் கட்டண மாஃபியா இருப்பதாகவும், இது பொதுமக்களுக்கு எரிவாயு தட்டுப்பாட்டிற்கு வழிவகுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை