சர்வதேசக் கண்காணிப்புகளின்றி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறுவது திருப்தியில்லை!  ரவிகரன் விசனம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தியளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டபின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் –

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளில் 13 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனத் தகவல்கள் வெளிவந்தன.

அதன் பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 05ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமாகி, செப்ரெம்பர் 06ஆம் திகதி இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி முல்லைத்திவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைசார்ந்தவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கு அவ்வாறு யாழ். பல்கலைக்கழகத் தொல்லியல் துறைசார்ந்தவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

தற்போது மக்கள் மத்திலில் தொல்லியல் துறையினர் மீது பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏன் எனில் குருந்தூர்மலை விவகாரத்தில், தொல்லியல் துறை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கட்டளையொன்றை வழங்கியிருந்தது. அந்தக் கட்டளையில் தொல்லியல் துறையினர் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மூன்று தடவைகள் மீறியதுடன், குருந்தூர் மலையில் விகாரை கட்டுவதற்கு ஒத்துழைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் தொல்லியல் துறையினர் இந்த அகழ்வுப் பணி விடயத்திலும் சரியாக நடந்துகொள்வார்களென நாம் எதிர்பார்க்க முடியாது.

அதேவே%B