பொலிசாருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் வியாழக்கிழமை (23) சேட்டை பிடித்து துப்பரவு பணியை செய்யவிடாது அசு்சுறத்தல் செய்த பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தம்ழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மாவீர் துயிலும் இல்லத்தினை துப்பரவு பணியில்ஈடுபட்டுக் சம்பவதினமான வியாழக்கிழமை (23) கொண்டிருந்தனர் அதன்போது அங்கு சென்ற வவுணதீவு பொலிசார் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாள் த.சுரேஸ் துப்பரவு பணியை மேற்கொள்ளவிடாது அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அவர்கள் தொடர்ந்து துப்பரவு பணியை செய்யமுடியாது அங்கிருந்து வெளியேறினர் அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் பொது மக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற வாழைச்சேனை பொலிசார் அவர்களை அச்சுறுத்தியதுடன் தரணி என்ற இளைஞனின் சேட்டை பிடித்து இழுத்து கையடக்க தொலைபேசியை பறித்து அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த இரு பொலிஸ் நிலைய பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு எதிராக நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இருவரும் முறைப்பாடு செய்ததுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை