ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டல்!
எம்.எப்.றிபாஸ்
அக்கரைப்ற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்த்துறையில் கலைக்கூறு ஒன்று முடித்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளர் யூ.எல்.எம்.ஹாசீம் உட்பட உதவி மாவட்ட ஆணையாளர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள், சாரண ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.