கல்முனை ஸ்ரீதரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில்கிழக்கு ஆளுநர் பங்கேற்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகா உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வுகள் புதன்கிழமை ஆலயத்தில் வெகு விமர்சியாக இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிவஸ்ரீ ந.பத்மநிலோஜன் குருக்கள் விசேட பூசை நிகழ்வுகளை நடத்தி வைத்ததுடன் ஆலய பரிபாலன சபையினரால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். கோபாலரத்தினம் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார். இதில் ஆலயத்தின் பரிபாலனசபையினர் நலன் விரும்பிகள் பிரதேச கல்விமான்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.