தேசிய திட்டமிடல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள் தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அழைப்பிற்கு இணங்க தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பனவற்றிலிருந்து பணிப்பாளர்கள் மற்றும் பிஎஸ்எஸ்பி செயல்திட்ட அதிகாரிகள் தீகவாப்பிய பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் மற்றும் ஆலோசனையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் சீ எம் மாஹிரும் பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரியும் வைத்திய சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர். )