சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலை வித்தியாரம்ப விழா!
சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட உடங்கா 01 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஸம் ஸம் பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா சம்மாந்துறை அல் அர்சத் பாடசாலை கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
மேலும் 2024 ஆம் ஆண்டில் புதிதாக இணைத்துள்ள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஏடு திறப்பு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா, அட்டாளைச்சேனை தேசியக் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் கே. எல். எம். பர்ஷாத் , சம்மாந்துறை அல் அர்சத் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ரஹீம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. சீ. எம். சஹீல் , மாணவர்களின் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.