தீபச்செல்வன் எமுதிய பயங்கரவாதி திருகோணமலையில் அறிமுக விழா..!
(ஹஸ்பர் ஏ.எச்)
ஈழ எமுத்தாளர் தீபச்செல்வன் எமுதிய பயங்கரவாதி நாவல் அறிமுக விழா சனிக்கிழமை மாலை 3.20 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் ஓய்வு நிலை அதிபர் க . யோகானந்தன் தலைமையில் இடம் பெற்றது.
தொடக்கவுரையை கவிஞர் ஆசிரியர் தி . பவித்ரன் வழங்கினார்.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினர் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி . தண்டாயுதபாணிக்கு நூல் ஆசிரியர் தீபச்செல்வன் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியீட்டு வைத்தார்.
தண்டாயுதபாணி சிறப்புரை நிகழ்த்தினார்;.