கல்முனையில் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு !
கே எ ஹமீட்
நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு கல்முனை ஆஷாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல் எம் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெப்பை, அக்கரைப்பற்று முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ் எம் சபீஸ் மற்றும் இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நூலை வெளியீடு செய்து வழங்கி வைத்தார்