யாழ்.வடமராட்சி அல்வாயில் கில்மிசாவுக்குக் கௌரவம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் சீ தமிழ் சரிகமப லிட்டில் சம்பியன் கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வட அல்வை இளங்கோ சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது அல்வாய் வடக்கு நாவலடி சந்தியில் இருந்து
கில்மிஷா வாகனத்தில் நிகழ்வு மைதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரனால் கில்மிஷாவுக்கு ‘கான வாணி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கில்மிஷாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தன