ஆபத்தான நிலையிலுள்ள கட்டபறிச்சான் பாலத்தை புனரமைத்துத்தர கோரிக்கை!
( மூதூர் நிருபர்)
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர் கட்டபறிச்சான் பாலம் மிக நீண்டகாலமாக சேதமடைந்து அதன் வலிமை தன்மை குறைந்த நிலையில் உடையக்கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுவதால் இதனை புனரமைத்துத்தருமாறும் இப்பகுதி பொதுமக்கள் உரிய பகுதியினரிடம் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
இப்பாலத்தினூடாகவே மூதூருக்கு சம்பூர் சேனையூர் கட்டபறிச்சான் கடற்கரைச்சேனை பள்ளிக்குடியிருப்பு நல்லூர் வீரமா நகர் பாட்டாளிபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் நாளாந்தம் பயணம் செய்துவருகின்றனர்.
இப்பாலம் யுத்தகாலத்தில் சேதமடைந்தாகவும் பொதுமக்கள் கூறுகின்றார்கள். இப்பாலத்தினூடாக பார ஊர்திகள் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட பெயர்பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தும் கனரக வாகனங்கள் பார ஊர்திகள் செல்வதைக் காணமுடிவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இப்பாலத்தினூடாக பிரயாணம் செய்யும்போது தாம் அச்சப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் இப்பாலத்தை பொதுமக்களின் நன்மை கருதி புனரமைத்துதருமாறு பொதுமக்கள் உரிய வர்களிடம் கோருகின்றனர்.