53 வருடங்களின் பின் தரமுயர்வு பெற்ற பாடசாலையில் தரம் 10 இல் புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு!
( மூதூர் நிருபர்)
மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃமூஃ செல்வ நகர், அந்நூர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 53 வருடங்களின் பின் இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டு இங்கு தரம் 10 இல் கல்வி கற்பதற்கு புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எம்.எம்.றிஸ்மி தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்பாடசாலையில் இதுவரை தரம் 1 முதல் தரம் 9 வரையான வகுப்புகளிலேயே மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டன. இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டதன் விளைவாக
இனி மாணவர்கள் இங்கு தரம் 1 முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதியவகுப்பறையைத் திறந்துவைத்து மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களையும் இதன்போது வழங்கிவைத்தார். கோட்டக்கல்விப்பணிப்பாளரும் , தோப்பூர் பாத்திமா மகளீர் கல்லூரி அதிபருமான ஏ.பி.ஏ.ஜப்பார் , மூதூர் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர்கள் ஊர்ப்பிரமுகர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பாடசாலையில் முதலாவது இணைத்துக்கொள்ளப்பட்ட முதல் சேர்விலக்கத்தைக்கொண்ட மாணவரான ஓய்வு பெற்றுள்ள கிராம சேவையாளரான மூமீன் இப்பாடசாலையின் முதல் மாணவராவார். அவரும் , இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தமை மற்றுமோர் விசேட அம்சமாகும்