வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்கவில்; கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர்கள் கைதாகியுள்ளார்கள்.
இவர்களிடமிருந்து நாற்பத்து மூன்று லட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு பொரளை பகுதியில் வசிக்கும் 29 வயது மற்றும் 25 வயதுடைய இருவரும் சட்ட விரோதமாக வெளிநாட்டுப் பொருள்களை இலங்கைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.