வவுனியாவில் பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள்
வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1728 தாய்மாருக்கு பால் மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பால்மா பொதிகள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 1728 தாய்மார்களுக்கு இரண்டு பால்மா பொதிகள் வீதம் 3456 பால்மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக வவுனியா தாண்டிக்குளம் கிராமசேவகர் பிரிவில் உள்ள 36 பேருக்கு பால் மா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கிராம சேவையாளர் ஜெ.மரினா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஞானேஸ்வரன் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.