தாருல் உலூம் ஆரம்ப பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு
.
சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட தாருல் உலூம் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காகவும், தங்குவதற்கு வகுப்பறைக்கான தளபாட வசதிகள் இன்றி காணப்பட்டது.
குறித்த பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க 40 அலகுகள் கொள்வனவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பறை தளபாடங்கள் மேசை, நாற்காலிகள் உள்ளிட்டவை அதிபர் கலீல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.