பாடசாலை கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் மாணவர் வரவேற்பு வைபவம்
( மூதூர் நிருபர்)
மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃ மூஃ புர்கானியா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்விக்கு மகிழ்ச்சி கரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 இற்குப் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளுவதற்கான ஆரம்ப வரவேற்பு விழா பாடசாலை அதிபர் ஏ.எச்.இம்ராம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
இதில் மூதூர் வலயக்கல்வி அலுவலக ஈபிஎஸ்ஐ இணைப்பாளர் ரீ.எம்.இம்தியாஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்., கிராம சேவையாளர் ஜலீஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர் இந் நிகழ்வுகளில் இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.