அகரம் பயில வாசல் நுழையும் வித்தியாரம்ப விழா நிகழ்வு!
– யூ.கே. காலித்தீன் –
சாய்ந்தமருது கமுஃரியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் வித்தியாரம்பவிழா வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
‘உலகை வெல்லும் கல்வியைக் கற்கத் தயாராகுவோம்’ எனும் கருப்பொருளில் ஆரம்பமான விழாவுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான அகர எழுத்தினை எழுதி ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை அதிபர் எம். வி. அஸ்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய ஆரம்ப கல்வியின் வளவாலர் எஸ்.எம்.எம். அன்சார் கலந்து கொண்டதோடு, சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் எம்.ஜி.அஹத், பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கதின் நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் யூ.கே. காலித்தீன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இத்நிகழ்வுக்காக உழைத்த பிரதி அதிபர், உதவி அதிபர், பாடசாலை ஆசிரியர்குழாம், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முதலாம் தர மாணவச் செல்வங்களுக்கு அதிதிகளால் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.