சாய்ந்தமருது பாடசாலைக்கு பல் ஊடகக் கருவி வழங்கல்!
எம். எப். றிபாஸ்
சாய்ந்தமருது கமு ஃலீடர் எம்.எச். எம்.அஷ்ரப் வித்தியாலயத்திற்கு பல் ஊடகக்கருவி வழங்கி வைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்று கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் நிறுவனத்தின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா
பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளையேற்று தனது கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ரிஸ்லி மூலமாக சொந்த நிதியிலிருந்து மல்ரி மீடியாவை வழங்கி வைத்தார்.
கல்முனை வலயக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.என்.எம்.ஏ. மலிக், ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் யூ.எல்.என்.ஹூதா உமர், மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம். றிஸ்வான், முன்னாள் பிரதி அதிபர் அப்துல் நிஸார், பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், ஆசிரியை, ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.