காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுக்கு மூதூரில் இரு அணிகள் தேர்வு!
மூதூர் நிருபர்)
மூதூர் பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்டுவரும் பிரதேச விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மூதூரிலுள்ள யங்லயன் மற்றும் , கீரோ ஆகிய இரு விளையாட்டுக்கழகங்களும் காற்பந்தாட்ட இறுதிச்சுற்றுக்குத் தெரிவாகியிருப்பதாக மூதூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மூதூர் பகுதியிலுள்ள 16 விளையாட்டுக்களகங்கள் இக் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்குபற்றியதாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் மேலும் கூறினார்.
இறுதிச்சுற்று பிரதேச விளையாட்டு விழாவன்று நடைபெறவுள்ளது .
இப்போட்டி வியாழக்கிழமை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.