சம்மாந்துறை பிரதேச செயலக ஒன்றுகூடலும், கௌரவிப்பும்!
(எஸ்.அஷ்ரப்கான்,சர்ஜுன் லாபீர், ஐ.எல்.எம்.நாஸீம்)
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அறுவடை – 2023 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களைக் கௌரவித்து நினைவு சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாஃத),(உஃத) பரீட்சைகளில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ்,பிரதம கணக்காளர் ஏ.எல்.ஆதம்பாவா,பிரதம பொறியியலாளர் ஏ.பி. சாஹீர்,மாவட்ட உள்ளக பிரதம கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்,கணக்காளர்கள் சம்மாந்துறை பிரதேச திணைக்களங்களின் தலைவர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உத்தியோகத்தர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேரப்பட்டதுடன்,போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசீல்களும் வழங்கப்பட்டது.