சமூக ஆர்வலரும், அ.இ.ம. காங்கிரஸ் கட்சியின் ஏ.கே.அமீரால் சீமெந்து பக்கெட்டுகள் வழங்கல்!
கே எ ஹமீட்
அட்டாளைச்சேனை , அல்ஜென்னா பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் தற்சமயம் மேற்கொள்ள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு பள்ளிவாசல் நிருவாகத்தினர் – தனவந்தர்கள், பிரமுகர்கள் என பலரது உதவிகளையும் பெற்றே குறித்த புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில் ஷாட் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.கே.அமீரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு தொகை சீமெந்து பக்கெட்டுகள் கடந்த வாரம் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் குறித்த பள்ளிவாசலின் கோரிக்கையினை பூர்த்தி செய்வதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அதற்கான ஒத்துழைப்புகளையும் பெறவுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்திற்கு முன்னர் பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு தங்களால் முடிந்த உதவி, ஒத்தாசைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.