அன்னமலை ஸ்ரீசக்தியில் முப்பெருவிழா நிகழ்வுகள்!
(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசக்தி வித்தியாலயத்தின் முப்பெருவிழா அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
வகுப்பு -01 இன் வித்யாரம்பம் ‘புதுமுக புகுவிழா ‘,வகுப்பு -5இன் விடுகை ‘விழா’, மற்றும் முன்பள்ளி மாணவர்களின் ‘புதுமுக புகுவிழா ‘வும் சேர்ந்து முப்பெருவிழாவாக
நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக இப் பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்று, தற்போது ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளராக பணியாற்றும் ரத்னம் சுபாகர் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா , சிறப்பதிதியாக ஈ.பி.எஸ்.ஐ. இணைப்பாளர் கே. குணரெத்ன ஆலயயங்களின் நிர்வாக பிரதிநிதிகள் , சமூக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனார்.
இவ் விழாவில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அன்னாமலையை சேர்ந்த கொழும்பில் வசிக்கும் தொழிலதிபர் எஸ்.காண்டீபன் (திரு திருமதி காண்டீபன் விவேணி தம்பதிகள் ) வழங்கி வைத்தனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.