சம்மாந்துறைக்கு ஆதில் ஹசன் மார்க்க சொற்பொழிவாளர் வருகை
சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இவாஸ்ட் சமூக அமைப்பும் இணைந்து வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த மார்க்க சொற்பொழிவு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ‘தொழுகையின்பால் மக்களை ஈர்த்தலும் றமழானை வரவேற்றலும்’ எனும் தொனிப்பொருளில் அஷ்ஷேஹ் ஆதில் ஹசன் மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.